என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணலிபுதுநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 226 வீடுகள், 43 கடைகளை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ்
- அப்பகுதி மக்கள் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் தகவல் தெரிவித்தனர்.
- பயோமெட்ரிக் முறையில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பொன்னேரி:
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மணலி புதுநகரில் கால்வாய் சாலை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 226 வீடுகள், 43 கடைகள் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் அப்பகுதியில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். மாற்று இடம் வழங்க அவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி மாற்று இடம் வழங்க அவரிடம் நடவடிக்கை எடுப்பதாகவும் பயோமெட்ரிக் முறையில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் நக்கீரன் உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் மாநகராட்சி 15-வது வார்டு உறுப்பினர் நந்தினி சண்முகம் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.






