என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரியவகை குரங்கு, பாம்புகள் பறிமுதல்
    X

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அரியவகை குரங்கு, பாம்புகள் பறிமுதல்

    • சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர்.
    • டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    அதில் வந்த பயணிகள் தங்களது பைகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுத்து சென்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்த 2 பெரிய பைகளை மட்டும் நீண்ட நேரம் யாரும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 2 பைகளையும் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அதில் இருந்த டப்பாக்களில் வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பையை பிரித்து பார்த்த போது அதில் அரியவகை 3 சிறிய குரங்குகள், 45 சிறிய மலைப் பாம்புகள், 2 நட்சத்திர ஆமைகள், 8 மண்ணுளிப் பாம்புகள், வெள்ளை முள்ளம்பன்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அனைத்து வனஉயிரினங்களும் நல்ல ஆரோக்கியமாக இருந்தது. இதையடுத்து விலங்குகள் அனைத்தையும் அதிகாரிகள் மீட்டு சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த போது அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து மர்ம கும்பல் பையில் இருந்த விலங்குகளை விமான நிலை யத்திலேயே விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×