என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரையில் ஆதரவாளருடன் மு.க.அழகிரி சந்திப்பு
  X

  மதுரையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் மண்டல தலைவர் இசக்கிமுத்துவை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார்.

  மதுரையில் ஆதரவாளருடன் மு.க.அழகிரி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மு.க.அழகிரி இன்று காலை மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள இசக்கிமுத்து வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
  • பின்னர் அவரது குடும்பத்தாரிடம் மருத்துவ செலவுக்கு தேவையான பண உதவி செய்தார்.

  மதுரை:

  முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் மதுரை டி.வி.எஸ். நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முன்னாள் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர். இவருக்கு மதுரையில் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளரான இசக்கிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

  அவரை மு.க.அழகிரி நேரில் சந்திக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள இசக்கிமுத்து வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

  பின்னர் அவரது குடும்பத்தாரிடம் மருத்துவ செலவுக்கு தேவையான பண உதவி செய்தார். அவரை நன்றாக கவனிக்கும்படி தெரிவித்துவிட்டு வெளியே வந்தார்.

  இதை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவரிடம்' நீங்கள் மீண்டும் மத்திய மந்திரியாக வர வாய்ப்பு உள்ளதா? என்றும், தி.மு.க. வில் இணைவீர்களா? உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்று கேட்டனர். ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்று விட்டார்.

  Next Story
  ×