என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்தது.
- உதயன் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். 108 ஆம்புலன்சு டிரைவர். இவர் மீஞ்சூர் வேளாளர் தெருவில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக சென்றார். அப்போது ரூ.50 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் பெட்டியில் வைத்து விட்டு மீதி பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துடன் வங்கிக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. மீதி பணத்தை உதயன் எடுத்து சென்றதால் அது தப்பியது. உதயன் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story






