என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 102.25 அடியாக உயர்ந்தது
- நீர்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- நேற்று 101.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.25 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு, அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று அணைக்கு விநாடிக்கு 6,712 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 6,595 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 101.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.25 அடியாக உயர்ந்தது.
Next Story






