என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,098 கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,098 கன அடியாக சரிவு

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து குறையும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று விநாடிக்கு 1,259 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 1,098 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 102.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.90 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து குறையும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×