என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 21,600 கனஅடி நீர் வெளியேற்றம்
- மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
- தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சேலம்:
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிய தொடங்கியது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு விநாடிக்கு 7,600 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 11 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக இனறு காலை 8 மணிக்கு அணையில் இருந்து விநாடிக்கு 11,600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நீர்திறப்பு காலை 9.,30 மணியளவில் விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணைமின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து சரிய தொடங்கி உள்ளது.