என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்ணிவாக்கம் ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு
- மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறைகளை பற்றி அங்கு இருந்த ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
- மத்திய குழுவினருக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், முறை குறித்து குழுவிற்கு எடுத்துரைத்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஓடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட, அசாம், அருணாசல பிரதேசம் போன்ற 15 மாநிலத்தை சேர்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மத்திய குழுவினர் மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் முறைகளை பற்றி அங்கு இருந்த ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்துராஜ் முதன்மை செயலாளர் பி.அமுதா, மத்திய குழுவினருக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், முறை குறித்து குழுவிற்கு எடுத்துரைத்தார்.
இவ்வாய்வின்போது ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளர் வினி மகாஜன், இணை செயலாளர் சமீர் குமார், ஒன்றிய குடிநீர் மற்றும் சுகாதார துறை கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், ஊரக வளர்ச்சி துறை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், துணை தலைவர் சுமதி லோகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு வருகை தந்த மத்திய குழுவினரை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றனர்.






