என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை- மரங்கள் சாய்ந்தன
- மீனவர்கள் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- சாலையில் சரிந்த மரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது.
இந்த மழை காலை வரை விட்டுவிட்டு பெய்தது. இதனால் மீனவர்கள் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
பலத்த காற்று காரணமாக கல்பாக்கம் சாலை, தேவ நேரி, குழிப்பாந்தண்டலம், கடம்பாடி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாயிகள் அமைத்திருந்த புடலங்காய், பாவக்காய் செடிகளின் கொடிப் பந்தல்கள் சரிந்தது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சாலையில் சரிந்த மரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story






