என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    மதுராந்தகம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • வாலிபர் ஒருவர், மூதாட்டி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரோஜா (வயது 60). இவர் மதுராந்தகம் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில், உறவினரின், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சோத்துப்பாக்கம் செல்வதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் பகுதி அய்யனார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அங்கு செல்போனில் பேசிக் கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க, வாலிபர் ஒருவர், மூதாட்டி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இது குறித்து சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில், மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மதுராந்தகம் உட்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×