என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காற்றழுத்த தாழ்வு நிலை நாளைமறுநாள் உருவாகிறது- இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
    X

    காற்றழுத்த தாழ்வு நிலை நாளைமறுநாள் உருவாகிறது- இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    • இலங்கை கடற்கரையையொட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

    மேலும் டெல்டா மாவட்டங்கள் வட, தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    இந்த நிலையில் இலங்கை கடற்கரையையொட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (9-ந்தேதி) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கிடையில் குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று 4 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருகிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் களியலில் 6 செ.மீ, மானாமதுரையில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.

    Next Story
    ×