என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்கள் கைது
    X

    கொடைக்கானலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்கள் கைது

    • கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
    • கண்காணிப்பு கேமிரா பதிவுவை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் மாட்டிக் கொண்டனர் என்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் குறிஞ்சியாண்டவர் கோவில் செல்லும் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்திற்குள் 2 பேர் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த விக்னேஷ் (வயது19), விஜய் (20) ஆகிய 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், விஜய் மற்றும் விக்னேஷ் ஆகியோர் 4 நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் மட்டும் வெளியே சுற்றி திரிந்தனர். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாததால் அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    கண்காணிப்பு கேமிரா பதிவுவை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் மாட்டிக் கொண்டனர் என்றனர்.

    Next Story
    ×