என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழ்பென்னாத்தூர் அருகே லாரி மோதி கணவன்-மனைவி பலி
- கீழ்பென்னாத்தூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த அருங்குணம் ஊராட்சி, புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (47).
இவர்களது உறவினர் வீடு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ளது. அங்கு உறவினர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் கணவன், மனைவி இருவரும் கீழ்பென்னாத்தூருக்கு பைக்கில் சென்றனர்.
பிறந்தநாள் விழா முடிந்து விட்டு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பைக்கில் மேல்மலையனூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு அருகே புறவழி சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரி எதிர்ப்பாராத விதமாக இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
கீழ்பென்னாத்தூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






