என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி டிரைவர்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
- காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.
- காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அதிக கல் குவாரிகள் இயங்கி வருவதால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் விதிகளை மீறி கனரக வாகனங்கள் செயல்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரம், ஒரு தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை கொண்டு செல்லும் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியும் அனுமதிக்குப்புறம்பாக காஞ்சிபுரத்தில் இயக்கியதற்கும், இலகு ரக சரக்கு வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமல் சென்றதற்கும் சிறை பிடித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தும் இதர குற்றங்களுக்காக ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் மற்றும் ரூ.30 ஆயிரம் சாலை வரி என மொத்தம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.






