என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
- கல்பாக்கம் பல்லவன் நகரில் வசிப்பவர் பாக்யராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- இரண்டு வீடுகளில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் பல்லவன் நகரில் வசிப்பவர் பாக்யராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கினார்.
இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பாக்யராஜின் மனைவி தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்பக்கம் மூடிவிட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை, 300 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல், அருகில் உள்ள இரண்டு வீடுகளில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






