என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாங்காடு அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
- ஜெயக்குமார் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
- வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த முகலிவாக்கம். குருசாமி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள உறவினர் விட்டிற்கு சென்று விட்டனர்.
இந்தநிலையில் ஜெயக்குமார் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர். இதுகுறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






