search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம்
    X

    சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம்

    • சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஒன்றியம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கல்பனா ஷங்கர் மற்றும் முதுநிலை துணைத் தலைவர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில்,முதுநிலை பொது மேலாளர் மோசஸ் சாமுவேல் வழிகாட்டுதலின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பகுதி அளவிலான இணையம் , பெல்ஸ்டார் நிதி நிறுவனம்

    ஆகியோர் உதவியோடு நடைபெற்றது .இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் இன்பநாதன் உலக சுற்றுச்சூழல் தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார், தங்கராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, சுரேஷ் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். முழு சுகாதார திட்டத்தை பற்றி சிறப்புரையாற்றினார்கள், ஊராட்சிமன்ற தலைவர். ஸ்ரீதர் விழாவுக்கு தலைமை தாங்கினார், அருணகிரி துணைத் தலைவர் , கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற செயலர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஜெய் வசந்தி, செந்தமிழ்ச்செல்வி, செலின் ராணி, அன்னை இந்திரா அப்துல் கலாம் பகுதி அளவிலான இணையத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பணியாளர். ஜெயலட்சுமி விநாயகமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.

    Next Story
    ×