search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது- ஆடுகள் விற்பனை தீவிரம்
    X

    அன்னூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு குவிந்தவர்களை படத்தில் காணலாம்.

    அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது- ஆடுகள் விற்பனை தீவிரம்

    • ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
    • தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

    அன்னூர்:

    அன்னூரில் ஆட்டுசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையானது சனிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.

    இங்கு அன்னூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வருகிறது.

    அன்னூர் ஆட்டு சந்தைக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகமான வியாபாரிகள் வாங்க வருவார்கள்.

    இன்று வழக்கம்போல் அன்னூர் ஆட்டுச்சந்தை கூடியது. ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

    மற்ற வாரத்தை விட இந்த வாரம் அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    வாரந்தோறும் இந்த ஆட்டுச்சந்தையில் 80 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுதவிர இந்த சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான (கத்தி, கறி வெட்டும் மரக்கட்டை) போன்றவையும் அதிகமாக வந்துள்ளதால் ஆட்டை வாங்க வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வியாபார பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் அன்னூரில் கோழி சந்தை ஆனது பிரசித்தி பெற்றது. கோழி சந்தையிலும் கோழியின் வரத்து அதிக அளவு உள்ளது. இங்கு நாட்டுக்கோழி. சேவல், நாட்டுக்கோழி, கறிக்கோழி போன்றவையும் தீபாவளி முன்னிட்டு அதிகமான அளவு சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    ஆட்டு சந்தை காரணமாக அதை சுற்றியுள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    Next Story
    ×