search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்ற கடைகள் பூட்டி சீல் வைப்பு
    X

    குட்கா விற்ற கடைகள் பூட்டி சீல் வைப்பு

    • குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    Next Story
    ×