என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் தனியார் நாட்டியக்கூடம் சார்பில் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
    X

    பொன்னேரியில் தனியார் நாட்டியக்கூடம் சார்பில் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

    • பொன்னேரியில் அபிநய நாட்டியக்கூடத்தின் எட்டாம் ஆண்டுவிழா மற்றும் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • இசைக்கலைமணி ஷோபனா முத்தையா ஆகியோர் பரதத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அபிநய நாட்டியக்கூடத்தின் எட்டாம் ஆண்டுவிழா மற்றும் பரதம் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாட்டியக்கூட ஆசிரியர் ஜெயந்தி சிவா தலைமை தாங்கினார்.

    இவ்விழாவில் பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் சுதி லயத்துடன் வித வித முகபாவனைகளுடன் நளினமுடன் அசத்தலாக பரதநாட்டியம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நாட்டிய மயூரி விஜயலட்சுமி பிரகாஷ், இசைக்கலைமணி ஷோபனா முத்தையா ஆகியோர் பரதத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து இப்பள்ளியில் பரதநாட்டியம் பயின்று நிறைவுசெய்த 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டனர். இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×