என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி மீது கொள்ளை கும்பல் தாக்குதல்- கிராம மக்கள் மறியல்
    X

    கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி மீது கொள்ளை கும்பல் தாக்குதல்- கிராம மக்கள் மறியல்

    • கும்மிடிப்பூண்டி, மேட்டு காலணியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.
    • அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி, மேட்டு காலணியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.தொழிலாளி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தனது 3 மகள்களை பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது 3 மர்ம வாலிபர்கள் ஆனந்தனை திடீரென வழிமறித்து அவரது மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டினர். இதில் ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஆனந்தனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் மீதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    Next Story
    ×