என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே குண்டர் சட்டத்தில் தந்தை-மகன் கைது
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.
- கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(49). இவரது மகன் வைஷ்ணவ்குமார்(22). இவர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 9.8.2022-ந்தேதியன்று காஞ்சிபுரத்தில் இருந்து 10 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து அதில் 5 கிலோ கஞ்சாவை தேனியில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொடுத்துவிட்டு மீதியிருந்த கஞ்சாவுடன் மயிலாடும்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






