என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுகுன்றம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    திருக்கழுகுன்றம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன்.
    • திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). விவசாயியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

    வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 8-ந்தேதி அவரது வயலில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×