search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் போலி டாக்டர் கைது- கிளினிக்கும் மூடப்பட்டது
    X

    தஞ்சையில் போலி டாக்டர் கைது- கிளினிக்கும் மூடப்பட்டது

    • சுப்பிரமணியன் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
    • எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவர் பார்மசி படித்திருந்தார். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்து ஆளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியன் மாதாக்கோட்டை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். மேலும் இவர் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

    இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம், தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிளினிக்கை மூடினர். மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×