என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் கைது
- வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.
- கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 43). இவர் குடித்துவிட்டால் தெருவில் வருவோர் போவோரை மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணன் (33) என்பவர் ஏன் இப்படி குடித்துவிட்டு வருவோர் போவோரை ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.
இது பற்றி கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அருணாசலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
Next Story






