என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு- ஒரு குடம் தண்ணீர் ரூ.7-க்கு விற்பனை
    X

    மீஞ்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு- ஒரு குடம் தண்ணீர் ரூ.7-க்கு விற்பனை

    • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.15 ஆகவும், கேன் தண்ணீர் ரூ.30 ஆகவும் விற்கப்படுகிறது.
    • பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேடு, கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அதிக உப்பு தன்மையுடன் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கிராமமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறார்கள். டிராக்டர் மூலம் வினிேயாகிக்கப்படும் தண்ணீர் ஒரு குடம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ரூ.15 ஆகவும், கேன் தண்ணீர் ரூ.30 ஆகவும் விற்கப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் வருகிறது. அதுவும் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால் குடிநீருக்கு பயன்படுத்தமுடிவதில்லை. குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் பாத்திரங்கள் முழுவதும் உப்பு படிகிறது. வாஷிங் மெஷின், அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் ரேஷன் பொருள் வாங்குவதற்காக அருகில் உள்ள கே. ஆர் பாளையம் பகுதிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வரவேண்டி உள்ளது. வயதானவர்கள் கைரேகை வைக்க செல்ல முடிவதில்லை என்றனர்.

    இதற்கிடையே மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து நாலூர் கே. ஆர் பாளையம், நந்தியம்பாக்கம் பகுதியில் புதிய டிரான்ஸ்பாமர் திறக்கப்பட்டது. இதில் தலைவர்கள் கலாவதி, பாலன், சுஜாதா ரகு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×