என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு வரும் டெல்லி விமானம் தாமதம்- பயணிகள் தவிப்பு
- விமானம் மீண்டும் அதிகாலை 4.25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வர வேண்டிய பயணிகள் விமானம் 3 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானம் வழக்கமாக, டெல்லியில் இருந்து வந்த பின்னர் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.25 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.
இதே விமானம் மீண்டும் அதிகாலை 4.25 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும். அதன் பின்பு அதே விமானம், மீண்டும் உள்நாட்டு விமானமாக, அதிகாலை 5.5 மணிக்கு, சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும். ஆனால் ஏற்கனவே டெல்லியில் இருந்து 3 மணிநேரம் விமானம் தாமதமாக வந்ததால் அந்த விமானத்தின் இலங்கை, சென்னை, அந்தமான் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Next Story






