என் மலர்
உள்ளூர் செய்திகள்

போடியில் தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
- விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த முத்துகிளி மகன் லோகேஸ்வரன்(19). போடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான நாட்டுத்துரை(19) என்பவருடன் பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த மாணவர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நாட்டுத்துரை படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர். இதுகுறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.