என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை மது குடித்துவிட்டு தாயுடன் தகராறு செய்ததால் மண்எண்ணை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
    X

    தந்தை மது குடித்துவிட்டு தாயுடன் தகராறு செய்ததால் மண்எண்ணை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

    • மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கெங்கவல்லி:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கவர்ப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். லாரி டிரைவர். இவரது மனைவி மோகனா. இவர்களது மகள் இலக்கியா (18).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயசங்கர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வரும்போது மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த மாணவி இலக்கியா வீட்டிலிருந்த மண்எண்ணையை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அவரது தாய் மோகனா அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×