என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னாளபட்டி அருகே கழுத்தை அறுத்து கட்டிடத் தொழிலாளி படுகொலை
    X

    சின்னாளபட்டி அருகே கழுத்தை அறுத்து கட்டிடத் தொழிலாளி படுகொலை

    • கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஜான்பாண்டியன் (24), தினேஷ்பாண்டியன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜான்பாண்டியனுக்கு திருமணமாகிவிட்டது. தர்மராஜ் கடந்த 3 நாட்களாக குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல்-மதுரை ரோடு செட்டியப்பட்டி பிரிவு தனியார் கல்லூரி அருகே வசந்தம் நகர் பகுதியில் தர்மராஜ் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவருக்கு மேல் இரு சக்கர வாகனம் கிடந்தது. இதனை அந்த வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்த கும்பல் விபத்து போல் காட்டுவதற்காக அவர் மீது பைக்கை போட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட தொழிலாளி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×