என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யூர் அருகே கிளியாற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
    X

    செய்யூர் அருகே கிளியாற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி

    • நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீநாத் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
    • அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கிளியாற்றின் வழியாக பாய்ந்து கடலில் கலக்கும்.

    தொடர் மழை காரணமாக கிளியாற்றில் தற்போது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் செய்யூர் அருகே சாமந்திபுரம் பகுதியில் உள்ள கிளியாற்றில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த ராஜாராமன் என்பவரது மகன் ஸ்ரீநாத் (வயது 20) குளித்தார்.

    நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீநாத் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் ஸ்ரீநாத்தை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியான ஸ்ரீநாத் புதூர் கிராமத்தில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு சென்று இருந்தார் அங்குள்ள நண்பர்களுடன் கிளியாற்றில் குளித்தபோது ஸ்ரீநாத் தண்ணிரில் மூழ்கி பலியாகி உள்ளார்.

    இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×