என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெரினா கடற்கரையில் 4 பேரிடம் செல்போன் பறிப்பு
- செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை இழந்த பொதுமக்கள் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, திண்பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிட்டனர்.
கார், இரு சக்கர வாகனங்கள், வேன் போன்றவற்றில் மெரினாவில் குவிந்த மக்கள் இரவு வரை பொழுதை கழித்தனர். இளம் தம்பதிகள், காதல் ஜோடிகள் என கூட்டம் கூட்டமாக அமர்ந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.
கூட்ட நெரிசலை போலீசார் கேமரா மூலம் கண்காணித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டன. மெரினாவில் இருந்த மோட்டார் சைக்கிளும் திருடு போய்விட்டது. இது தவிர ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டுடன் மணி பர்சையும் வழி பறித்து சென்றனர்.
செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை இழந்த பொதுமக்கள் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






