என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராயபுரத்தில் அண்ணனை வெட்டிய வாலிபரின் கழுத்தை அறுத்த சிறுவன் கைது
    X

    ராயபுரத்தில் அண்ணனை வெட்டிய வாலிபரின் கழுத்தை அறுத்த சிறுவன் கைது

    • தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.
    • ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிளி என்கிற தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் கடந்த மாதம் தினேசை கத்தியால் ஆகாஷ் வெட்டினார்.

    இந்த வழக்கில் கைதான ஆகாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.

    நேற்று இரவு ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஆகாஷ் தனியாக வந்தபோது அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு சிறுவன் தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாசுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    Next Story
    ×