search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வெளிநாட்டு நிதி மூலம் கமிஷன் பெற்ற ஆசிரம நிர்வாகி- பரபரப்பு தகவல்கள்
    X

    விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இந்திய தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டா நேரில் விசாரணை நடத்திய காட்சி.

    வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வெளிநாட்டு நிதி மூலம் கமிஷன் பெற்ற ஆசிரம நிர்வாகி- பரபரப்பு தகவல்கள்

    • நிதியின் மூலம் ஜூபின் பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத்துள்ளது.
    • கருணை பயணம் என பெயரிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் நல சிகிச்சை அளிக்க வெளி மாநிலத்துக்கு அனுப்புவதாக அழைப்பிதழ் வெளியிட்டும் ஜூபின் பேபி நிதி குவித்துளார்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிலர் மாயமானார்கள். இதனால் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அடித்து துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 பேர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேர் பெண்கள்.

    தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் கலெக்டர் பழனி முன்னிலையில் நேற்று மருத்துவமனைக்கு வந்து ஆசிரமவாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் நிருபர்களிடம் காஞ்சன் கட்டார் கூறும் போது, இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது. நாங்கள் ஆணையத்திடம் அறிக்கை வழங்குவோம்.

    காப்பகத்தில் இருந்த 2 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். எங்கள் விசாரணையில் அது உண்மை என உறுதி செய்யப்டப்பட்டுள்ளது என்றார்.

    அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி அன்பு ஜூபின் கேபி கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2005-ல் குண்டலப்புலியூரில் அறக்கட்டளை என்று பதிவு செய்து ஒரு சிறிய கட்டிடத்தில் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி மனநலம் குன்றியோர், ஆதரவற்றவர்களை சேர்த்துள்ளார்.

    ஆசிரமத்தில் சிறிய கட்டிடத்தில் இருந்த ஆசிரமம் அசுர வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் பண ஆசையில் இடப் பற்றாக்குறை, உயர் மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களை காட்டி இங்கிருந்தவர்களில் சிலரை கமிஷன் பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களுக்கு ஜூபின் பேபி அனுப்பி வைத்துள்ளார்.

    ஜூபின் பேபி மூலம் பெறப்பட்ட ஆட்களை கொண்டு அந்த ஆசிரமத்தினர் தங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை தங்க வைத்து பராமரிது வருகிறோம் என கணக்கு காண்பித்து வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று குவித்துள்ளனர்

    அந்த நிதியின் மூலம் ஜூபின் பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத்துள்ளது. இதற்கு கருணை பயணம் என பெயரிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் நல சிகிச்சை அளிக்க வெளி மாநிலத்துக்கு அனுப்புவதாக அழைப்பிதழ் வெளியிட்டும் ஜூபின் பேபி நிதி குவித்துளார். ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு காணாமல் போனவர்கள் 11 பேர் என போலீசார் கூறுகின்றனர்.

    மேலும் சிலர் காணாமல் போனதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டதா? என்று தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.

    Next Story
    ×