search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரச்சலூர் அருகே காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது
    X
    கைது செய்யப்பட்ட கார்த்திகேயனையும், பறிமுதல் செய்யப்பட்ட ேரஷன் அரிசியையும் படத்தில் காணலாம்.

    அரச்சலூர் அருகே காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது

    • அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மாருதி அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மாருதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் (42) தொழிலாளி என்றும், பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேசன் அரிசியை காரில் கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 800 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×