என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்
    X

    காஞ்சிபுரம் கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்

    • காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
    • மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு சார்பில் 5 ஆயிரம் பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். மாநில தலைவர் அண்ணாமலை, கோட்ட பொறுப்பாளர் வினோத் செல்வம், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் ஆகியோரின் ஆசியுடன் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் பாபுஜி ஆகியோரின் ஒத்துழைப்பில் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் லட்சுமி நாராயணன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரதீஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்பின் பேரில் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் பா. ஜனதாவில் இணைந்தனர்.

    கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம் 5 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கான தகவல்களை புத்தகமாக கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அப்போது நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×