என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூடுவாஞ்சேரி அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
  X

  கூடுவாஞ்சேரி அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
  • அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  வண்டலூர்:

  கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர், ஏ.வி.எம்.நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரா. இவர் பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். விஜயகுமார் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

  கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

  அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

  இதுகுறித்து சந்திரா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×