என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த 2 வாலிபர்கள் கைது
- மீஞ்சூர் பஜார் பகுதியில் 2 வாலிபர்கள் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் போலீஸ்நிலைய காவலர்கள் முகமது ஆசிப், பெரியசாமி ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது மீஞ்சூர் பஜார் பகுதியில் 2 வாலிபர்கள் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இருவரும் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் திடீெரன போலீஸ்காரர்கள் முகமது ஆசிப், பெரியசாமி ஆகிய 2 பேரையும் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு தப்பி சென்றனர். அதிர்ச்சிஅடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (25)விக்னேஷ் (26) என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.






