search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி அருகே 2 தொழிலாளர்கள் பலி: அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
    X

    காரைக்குடி அருகே 2 தொழிலாளர்கள் பலி: அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு

    • 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல்-சாக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இங்கு நெல்மணிகளை அரிசியாக மாற்றி அதை கோம்போ என்றழைக்கப்படும் தானியங்கி சேமிப்பு எந்திரத்தில் சேமித்து வைப்பார்கள். பின்னர் கன்வேயர் மூலம் அரிசி கீழே இறங்கும். அதனை சாக்குகளில் பிடித்து அடுத்த பிரிவுக்கு அனுப்புவார்கள். பின்னர் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும்.

    இந்தநிலையில் நேற்று அரிசி ஆலையில் அரிசியை சாக்குகளில் பிடிக்கும் பணியில் கண்டனூரை சேர்ந்த முத்துச்சாமி (வயது40), பீகார் மாநிலம் பூரணியா பகுதியை சேர்ந்த குந்தன் குமார்(25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அரிசி சேமிப்பு ராட்சத எந்திரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் சிக்கி முத்துச்சாமி, குந்தன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அப்போது எந்திரத்தில் இருந்து 14 டன் அரிசி மொத்தமாக 2 தொழிலாளர்கள் மீதும் கொட்டியது. அரிசி குவியலில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் பலியான 2 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர் சேகர்(65), அவரது மகன் கண்ணன்(39) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×