என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் 12,000 தி.மு.க. துண்டு பிரசுரங்கள் பறிமுதல்
- பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருவிதாங்கோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தி.மு.க. துண்டு பிரசுரங்கள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த சுமார் 12,000 துண்டு பிரசுரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பறக்கும் படை சோதனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 3 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.2,66,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதியில் ரூ.65,400 குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 927 பணத்தை பறிமுதல் செய்தனர்.






