என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு நாள் தினவிழா பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்
    X

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஓட்டபந்தயத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு நாள் தினவிழா பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்

    • தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இப்போட்டிகளில் 23 பள்ளிகளை ேசர்ந்த 244 மாணவிகளும், சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் 3 குழந்தைகள் இல்லங்களில் இருந்து 34 பெண் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளினையே 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடபட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கொண்டாட திட்டமிடப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    2ம் நாள் நிகழ்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டப்போட்டிகளும்,

    நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், சதுரங்கம், இறகுபந்து (ஒற்றையர்) மற்றும் கேரம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 23 பள்ளிகளை ேசர்ந்த 244 மாணவிகளும், சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் 3 குழந்தைகள் இல்லங்களில் இருந்து 34 பெண் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு சுதந்திர தின விழாவில் 'சாம்பியன்' பட்டத்துடன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த பெண் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×