என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்திமுனையில் தாசில்தாரிடம் நகை பறிப்பு
    X

    கத்திமுனையில் தாசில்தாரிடம் நகை பறிப்பு

    • வீட்டின் உள்ளே தனியாக இருந்த மூதாட்டி பொன்மீனாட்சியிடம் நகைகளை கழட்டி தரும்படி கேட்டுள்ளனர்.
    • மூதாட்டி மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ.நகர், கோதண்டராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்மீனாட்சி (வயது 77). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது கணவர் கணேசனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று தனியாக இருந்த மூதாட்டி பொன்மீனாட்சியிடம் நகைகளை கழட்டி தரும்படி கேட்டுள்ளனர்.

    அதற்கு மூதாட்டி மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். இதனிடையே ரேசன் கடைக்கு சென்று வீடு திரும்பிய கணேசன் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பொன்மீனாட்சி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×