என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டகரம் ஊராட்சியில் தூய்மை பாரத விழிப்புணர்வு
    X

    காட்டகரம் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் சார்பில், சந்தூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரைப்படங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்ட காட்சி.

    காட்டகரம் ஊராட்சியில் தூய்மை பாரத விழிப்புணர்வு

    • பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த காட்டகரம் ஊராட்சியில், குப்பை இல்லா இந்தியா, ஊராட்சி அளவில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வரைபடங்கள், சந்தூரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மண்டல துணை பி.டி.ஓ. சுசேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள், மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பேசுகையில், ஊராட்சி அளவில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி தூய்மை உறுதிமொழி எடுத்தல், நம்ப ஊரு சூப்பர் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்ட சுகாதார குழு உறுப்பினர்களை சுகாதாரம் குறித்து மாணவர்களிடையே பிரசாரம் செய்து பள்ளியில் சுகாதார வகுப்பு நடத்த வேண்டும்.

    ஊராட்சியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார முகாம்கள் நடத்த வேண்டும் என்றார். இறுதியில் ஊராட்சி செயலர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×