என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூரிய காந்தி எண்ணை விலை மீண்டும் உயர்வு
- வெளிநாடுகள் அதிகளவில் சூரிய காந்தி எண்ணையும் இந்தியாவுக்கு இறக்குமதி
- வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய எண்ணை 10 முதல் 15 சதவீதம் வரை சரிவு
சேலம்:
இந்தியாவில் தாவர எண்ணைகளில் தேவைகளை வெளிநாடுகள் அதிகளவில் பூர்த்தி செய்கிறது. இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பாமாயிலும், ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பாமாயிலும், ரஷ்யா, உக்ரைன், ஆகிய நாடுகளில் இருந்து சூரிய காந்தி எண்ணையும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
பாமாயில் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவுக்கு வரவேண்டிய வரத்து சரிந்ததால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.140 வரை சென்றது. அதேபோல் ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக ரூ.130 முதல் ரூ.150-க்கு விற்ற சூரியகாந்தி எண்ணை தற்போது ரூ.190 முதல் ரூ.220 வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக எண்ணை வரத்து அதிகரிப்பால், பாமாயில், சூரியகாந்தி விலை சரிந்தது.இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின்போது, சமையல் எண்ணையின் தேவை அதிகரித்தது. இதனிடையே வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய எண்ணை 10 முதல் 15 சதவீதம் வரை சரிந்தது. இதன்காரணமாக சமையல் எண்ணை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பாமாயில் விலை ரூ.160, சூரிய காந்தி எண்ணை விலை ரூ.200, கடலை எண்ணை ரூ.280, தேங்காய் எண்ணை ரூ.220 என விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






