search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருளி அருவி: ஆதி அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    X

    சிறப்பு அலங்காரத்தில் ஆதி அண்ணாமலையார்.


    சுருளி அருவி: ஆதி அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.
    • சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்து ள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இங்கு கைலாசநாதர் குகை, பூத நாரயணன் கோவில், ஆதி ,அய்யப்பன் கோவில், கன்னிமார் கோவ்இல் ஆகியவை உள்ளன. இத னால் ஏராளமான சுற்று லாப் பயணிகளும், பக்தர்க ளும் சுருளி அருவியில் குளித்துவிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

    , ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சுருளி அருவி பகுதியில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்ற னர். நேற்று ஆடி அமாவா சையை முன்னிட்டு அதிகா லையில் இருந்தே ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர்.

    அருவியில் நீராடிய பின்னர் அருகே உள்ள சுருளி அருவி ஆற்றில் தங்களது முன்னோர்கள் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர். பின் புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த உத்தமபாளை யம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி உத்தரவில் கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் ஏராளமான போலீசாரும், கம்பம் கிழக்கு வனசரகர் பிச்சை மணி தலைமையில் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சுருளிதீர்த்தம் பண்டார துறையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவி லில் உள்ள மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகை யான அபிஷேகங்கள் நடை பெற்றது. பூசாரி முருகன் சிறப்பு வேள்வி யாகத் துடன் பூஜை செய்தார்.

    ஆதி அண்ணாமலையார் பக்தர்க ளுக்கு வில்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் காலை முதல் மாலைவரை அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த சுருளி பட்டியில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல ஒரு வழி பாதை அமல் படுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×