search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் குடும்ப பிரச்சினையால் பிரிந்த சகோதரர்களை சேர்த்து வைத்த போலீஸ் சூப்பிரண்டு
    X

    ஊட்டியில் குடும்ப பிரச்சினையால் பிரிந்த சகோதரர்களை சேர்த்து வைத்த போலீஸ் சூப்பிரண்டு

    • ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நீலகிரியில் உள்ள காவலர் சிறார் மன்றத்தில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணை நடத்தப்பட்டது.

    பெட்டிசன் மேளாவில் நிலவையில் இருந்த குடும்ப பிரச்சினை, பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக உள்ள மனுக்கள் மீது மறு விசாரணை செய்து தீர்வு காண நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மேலும் பெட்டிசன் மேளாவுக்கு வந்த கணவன், மனைவி 2 பேருக்கும் அறிவுரைகளை வழங்கி, அவர்களுக்கிடையேயோன பிரச்சினையும் தீர்த்து வைக்கப்பட்டது.இந்த பெட்டிசன் மேளாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன், தம்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், நாம் பிறப்பது ஒரு முறை, இறப்பது ஒரு முறை தான்.

    வாழ்வது ஒரு முறை தான். நாம் இறந்தால் எதையும் கொண்டு போவது இல்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒருவ ருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.

    அவரின் அறிவுரையை அடுத்து அண்ணன் தம்பி 2 பேரும் சேர்ந்து கொண்ட னர். வரும் போது தனித்தனியாக வந்தவர்கள், போகும் போது அண்ணன், தம்பி 2 பேரும் ஒரே காரில் ஏறி சென்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தனது அன்பால் பொதுமக்களை அரவணைத்து அறிவுரைகளை கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×