என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்
    X

    கோடை கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

    • பயிற்சி முகாமானது மே மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும்.
    • 10 வயது முதல் வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பேராதரவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானம், கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது. இப் பயிற்சி முகாமானது மே மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும்.

    10 வயது முதல் வயது வரையிலான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் "கோச்சிங்கில்" லெவல்-1 தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் இந்த முகாமினை நடத்துவார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் விருப்பமுள்ள வர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33- கே தியேட்டர் சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கொண்டு கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் குறித்து அறிய விருப்பமுள்ளவர்கள் காளிதாசன் 9994182296 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்துக் கொள்ளவும்.

    மேற்கண்ட கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்த விவரங்களை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    Next Story
    ×