search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே கல்வெட்டு எழுத்துக்கள் ஆய்வு
    X

    உடுமலை அருகே கல்வெட்டு எழுத்துக்கள் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் உள்ளது.
    • தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தளி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வரலாற்றுச்சின்னங்கள் உள்ளன. இந்நிலையில் உடுமலை பகுதியில் பெருங்கற்காலம் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து பதிவு செய்யும் பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வகையில் வீரநாராயணப்பெருவழி மற்றும் கொங்கப்பெருவழி எனும் பெருவழிகளில் உடுமலை பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கோட்டமங்கலம், நீலம்பூர், மெட்ராத்தி போன்ற இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டது.

    இது குறித்து ஆய்வுக்குழுவினர் கூறியதாவது:- தற்போது பாலக்காட்டுக் கணவாய் எனும் ஆனைமலை வழியாக செல்லும் பெருவழியான பெரியபாப்பனூத்து கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான பாறைக்கற்களும், சிதிலமடைந்த இடுதுளை உள்ள பாறைகளும் உள்ளது.

    சிறு அளவிலான கற்களில் தமிழி எழுத்தில் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளது. இது பிற்காலத்தில், 15, 16ம் நூற்றாண்டுகளில் கோவிலுக்கு இறையிலி நிலங்கள் எழுதி வைத்ததற்கான கல்வெட்டு சான்றுகளாக இருக்கலாம். பெரியபாப்பனூத்துக்கு அருகில் கெடிமேடு பகுதியில் புதிர்நிலைக்கற்கள் உள்ளது.

    எனவே இது பெருவழியாக இருந்துள்ளதற்கு வாய்ப்புள்ளது.கல்திட்டை சிதிலமடைந்தும் இடுதுளைக்கற்கள் உடைந்து இருப்பதும் காலத்தால் முற்பட்ட கல்திட்டையாக கருதலாம்.மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளையும் மாடுகளையும் கோழிகளையும் சேவல்களையும் தன்னுடைய சொத்துகளாக கருதி வளர்த்துள்ளனர்.

    மேலும் கால்நடைகளுக்காக கல்வெட்டுகளையும், நினைவு நடுகற்கள் வைத்தும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.இவ்வாறு ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். தமிழக அரசும் இது போன்ற ஆய்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×