என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் விடுமுறையை எதிர்பார்த்து ஏமாந்த மாணவ-மாணவிகள்
    X

    மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள்.

    திண்டுக்கல்லில் விடுமுறையை எதிர்பார்த்து ஏமாந்த மாணவ-மாணவிகள்

    • பள்ளிக்கு செல்லும் போது பலத்த மழை பெய்ததால் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.
    • புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் சிறு குழந்தைளுக்காவது விடுமுறை அறிவிக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், தேனி உள்பட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக நேற்று மாலை முதலே மாவட்டத்தில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தது. மேலும் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது. இன்று காலையில் சற்று மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் 8 மணி அளவில் பலத்த காற்றுடன் பெய்ய தொடங்கியது.

    ஆனால் பள்ளிகளுக்கு எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாணவர்கள் விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் நனைந்த படியும், மழை கோட்டு அணிந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். ஆனால் பள்ளிக்கு செல்லும் போது பலத்த மழை பெய்ததால் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதேபோல நத்தம், வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் சென்றனர். நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அவர்களை பள்ளிக்கு விடவந்த பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் சிறு குழந்தைளுக்காவது விடுமுறை அறிவிக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ள குழந்தைகள் இதுபோன்ற சூழலில் பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் மட்டுமின்றி மற்ற குழந்தைகளும் நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்கும் குழந்தைகள் மற்றும் நெருக்கமாக அமர்ந்து வகுப்பறையில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் நிலை உருவாகுேமா என பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×