என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உங்கட்டி அரசு பள்ளி மாணவர்கள்  மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு தகுதி
    X

    உங்கட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு தகுதி

    • ஒசூர் இந்து அரசு உயர்நிலைப்பள்ளி பல்வேறு பள்ளி மாணவர்கள் இடையே ஓசூர் வடக்கு சரக அளவிலான கபடி போட்டி நடத்தியது.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமார் , ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி அருகே உங்கட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 250 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒசூர் இந்து அரசு உயர்நிலைப்பள்ளி பல்வேறு பள்ளி மாணவர்கள் இடையே ஓசூர் வடக்கு சரக அளவிலான கபடி போட்டி நடத்தியது.

    இந்த போட்டியில் உங்கட்டி பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்து பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் , பிடித்து சாதனை படைத்து, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமார் , ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    இந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றால் மாநில அளவிலான கபடி போட்டிக்கு இந்த மாணவர்கள் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×